search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரஷ்ய அதிபர்"

    ரஷ்யாவில் தீவிர நோயால் பாதிக்கப்பட்ட 10 வயது சிறுவனின் ஆசையை அதிபர் புதின் பூர்த்தி செய்துள்ளார். #Kremlin #Putin
    ரஷ்யாவின் தெற்கே ஸ்டாவ்ரோபோல் பகுதியில் வசித்து வரும் 10 வயது சிறுவனுக்கு தீவிர நோய் இருந்தது.  இதனால் அவன் விரும்பிய சம்போ என்ற விளையாட்டில் தொடர்ந்து பயிற்சி பெற முடியாமல் அதில் இருந்து விலக வேண்டியிருந்தது.

    அவனுக்கு ரஷ்ய அதிபர் புதினுடன் கைகுலுக்க வேண்டும் என்ற நீண்டநாள் ஆவல் இருந்தது.  இந்த ஆசை நிறைவேறியுள்ளது.  சிறுவனை கிரெம்ளின் மாளிகைக்கு புதின் வரவழைத்துள்ளார். அங்கு தனது தாயுடன் சென்ற சிறுவனை புதின் சந்தித்து சிறிது நேரம் பேசினார். அதன்பின் அவனிடம் கைகுலுக்கி அவனது ஆசையை பூர்த்தி செய்து வைத்துள்ளார்.

    அவனது போட்டிக்கான ஆடையிலும் புதின் கையெழுத்து இட்டு உள்ளார். நோயை விரட்டிய பின் முதல் போட்டியில் கலந்து கொள்ளும்பொழுது இந்த ஆடையை அணிந்து கொள்ளலாம் என சிறுவனின் தாய் அவனிடம் உறுதி கூறியுள்ளார்.

    ரஷ்யாவின் கிரெம்ளின் மாளிகையில் சுற்றி பார்த்த அந்த சிறுவன் அங்குள்ள பல அறைகளுக்கும் சென்றுள்ளான்.  ஆண்டிரீவ்ஸ்கை என்ற அறைக்கும் அவன் சென்றுள்ளான். இங்கு முக்கிய தலைவர்கள் பதவி ஏற்று கொள்வது வழக்கம்.

    இதுபற்றி சிறுவன் கூறும்பொழுது, நான் மாஸ்கோ நகருக்கு முதன்முறையாக வந்துள்ளேன்.  இதில் நான் ஆர்வமுடன் இருந்தேன். அதிபர் புதின் எனது கைகளை வலிமையுடன் குலுக்கினார் என கூறியுள்ளான்.#Kremlin #Putin
    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் சந்திப்பு நடப்பதற்கான முயற்சிகள் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட வேண்டும் என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். #TrumpKimSummit #KimJongUn #DonaldTrump
    மாஸ்கோ:

    வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் - அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோரது சந்திப்பு அடுத்த மாதம் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்திக்க திட்டமிட்டப்பட்டு இருந்தது. இதற்காக அமெரிக்க தரப்பில் இருந்து சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. அணு ஆயுத சோதனை கூடங்களை அழித்துவிட்ட வடகொரியா, சில நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.

    நேற்று வெள்ளை மாளிகையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறுகையில், கிம் உடனான ஜூன் 12 சந்திப்பு வேலைக்கு ஆகாது என்றே தோன்றுகிறது என தெரிவித்திருந்தார்.

    இதற்கிடையே, வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் உடன் ஜூன் 12-ம் தேதி சிங்கப்பூரில் நடைபெற இருந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்படுவதாக டிரம்ப் அறிவித்தார்.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் சந்திப்பு நடப்பதற்கான முயற்சிகள் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட வேண்டும் என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, ரஷ்ய அதிபர் புதின் மற்றும் பிரான்ஸ் அதிபர் எம்மானுவல் மெக்ரான் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்.

    அப்போது அவர்கள் கூறுகையில், அதிபர் டிரம்ப் - கிம் ஜாங் அன் சந்திப்பு ரத்து செய்யப்பட்ட்டது வருத்தத்தை அளிக்கிறது. இருவரும் சந்திப்பதற்கான முயற்சிகளை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்தனர்.#TrumpKimSummit #KimJongUn #DonaldTrump
    ×